மகுடம் கலை இலக்கிய வட்டம், “கா” கலை இலக்கிய அமைப்புடன் இணைந்து நடத்திய புலம்பெயர் எழுத்தாளரும், பல்துறைக் கலைஞருமான கோவிலூர் செல்வராஜன் எழுதிய “நல்லது நடக்கட்டும்!” சிறுகதை நூல் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை (10) மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மட்/தருமபுரம் தருமரெத்தினம் வித்தியாலய அதிபர் ச.மணிசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக லண்டனில் வசிக்கும் பேராசிரியர் பாலசுகுமாரும், சிறப்பு விருந்தினரும், முதல் பிரதி பெறுபவமாக அவுஸ்திரேலியா எழுத்தாளரும், ஆய்வாளருமான பாடும்மீன் ஸ்ரீஸ்கந்தராஜாவும் கலந்து சிறப்பித்தனர்.









