பெரிய நீலாவணை காவேரி விளையாட்டுக் கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு – 2023.
பெரிய நீலாவணை ,காவேரி விளையாட்டுக் கழகம் தமது 2023 ஆம் ஆண்டிற்கான புதிய சீருடையை அறிமுகம் செய்த்து.
இந் நிகழ்வு கமு/ சரஸ்வதி வித்தியாலய கேட்போர்கூட மண்டபத்தில் 03/06/2023 இடம் பெற்றது.
சீருடையை அன்பளிப்புச் செய்த காவேரி விளையாட்டுக் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினரும் தற்போதைய ஆலோசகர் குழாமில் ஒருவருமான கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் திரு.க.சுரேஷ் அவர்களின் தந்தை திரு.எஸ்.கணேஷ் அவர்களின் கரங்களால் காவேரி விளையாட்டுக் கழகத்தின் தலைவர் திரு.தி.சுரேஷ்குமார் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் காவேரி விளையாட்டுக் கழகத்தின் நிருவாக தலைவர் பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திரு.வே.அரவிந்தன் அவர்களும், கழகத்தின் பொருளாளர் திரு.ரி.லோகராஜா (ஓய்வுநிலை இ.மி.ச.உத்தியோகத்தர்) அவர்களும் , காவேரி விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகர் அம்பாறை மாவட்ட கணக்காய்வாளர் திரு.க.ரவிந்திரன் அவர்களும், காவேரி விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகரும் சிரேஷ்ட பொறியியலாளருமான திரு.குமரேந்திரன் அவர்களும், விளையாட்டுக் கழகத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான தபாலக உத்தியோகத்தர் திரு.எஸ்.நவநீதன் அவர்களும், காவேரி விளையாட்டுக் கழக செயலாளரும், தொழில்நுட்ப உத்தியோகத்தருமான திரு.பா.மதன்ராஜ் அவர்களும்,காவேரி விளையாட்டு கழகத்தின் நிருவாக உறுப்பினர்களான திரு.சி.குமுதன் ( அபிவிருத்தி உத்தியோகத்தர்) , ஆசிரியர் திரு.எஸ்.ஜெகன். மற்றும் காவேரி விளையாட்டுக் கழகத்தின் நிருவாக உறுப்பினரும் மனிதநேயச் செயற்பாட்டாளருமான திரு.த.சுஜீபன் ஆகியோரோடு கழக உறுப்பினர்களும் இணைந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்.
நிகழ்வில் அனைத்துக் கழக உறுப்பினர்களுக்கும் புதிய சீருடைகள் வழங்கப்பட்டு நிருவாகத்தினரின் சிறப்பு உரையோடு இந்நிகழ்வு இனிதே நடைபெற்றது.


