மற்றவர்களின் QR குறியீடுகளை பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சட்டவிரோத செயலுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களிடம் கோரிக்கை ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
விடுமுறை நாட்களில் எரிபொருள் விநியோகம்
இதேவேளை, இன்றும் (03) நாளையும் (04) எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த 4 மாதங்களில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் கூடுதல் நேர கொடுப்பனவுகளை கட்டுப்படுத்திய போதிலும் தடையின்றி எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்திற்கொண்டு, அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் தட்டுப்பாடின்றி போதுமான எரிபொருள் இருப்புக்களை வழங்கும் வகையில் இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.