இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தேசிய எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான தற்போதைய 7 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை 14 லீட்டராக அதிகரிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய ஒதுக்கீடுகள்
பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிக்கான 15 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை 22 லீட்டராகவும், சாதாரண முச்சக்கரவண்டிக்கு 08 லீட்டராக இருந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 14 லீட்டராக அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
30 லீட்டராக இருந்த காருக்கான எரிபொருள் ஒதுக்கீடு 40 லீ்ட்டராகவும், வான் ஒன்றிற்கு வழங்கப்பட்டு வந்த எரிபொருள் ஒதுக்கீடு 30 லீட்டரில் இருந்து 40 லீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், பேருந்துகளுக்கு 60 லீட்டராக இருந்த எரிபொருள் ஒதுக்கீடும் இன்று நள்ளிரவு முதல் 125 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
75 லீட்டராக இருந்த லொறிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 125 லீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.