கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வது தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பொன்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் ஜீன் மாதம் முதல், பொதுமக்கள் தங்களுக்கான கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு பிரவேசிக்க வேண்டிய அவசியம் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்களில் கடவுசீட்டு
அந்த திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,“வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பத்தை, இணையத்தளம் ஊடாக அனுப்பி வைக்கலாம்.

வீட்டிலிருந்தவாறே கடவுசீட்டு பெறலாம்
இதற்கு அமைவான கட்டணம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடலாம்.
அத்துடன் பிரதேச செயலக காரியாலயங்களில், கைவிரல் அடையாளங்களை பதிவு செய்ய முடியும்.
இதற்கமைய மூன்று நாட்களின் பின்னர், பதிவுத் தபால் மூலம் விண்ணப்பதாரரின் வீட்டுக்கே கடவுச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.” என அவர் தெரிவித்துள்ளார்.
