நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு உளவள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு!
நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை மாணவர்களுகான ஆன்மீக தொடர்பாடல் மற்றும் அறக்கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான உளவள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு அதிபர் ஜெனிதா மோகன் தலைமையில் இடம்பெற்றது.
இதற்கு வளவாளராக கலந்து பெறுமதி மிக்க சேவையை வழங்கிய கல்முனை வடக்கு பிரதேச செயலக உளவளதுணை உத்தியோகத்தர் திருமதி. க. சந்திரகுமார் அவர்களுக்கும் ஒழுங்குகளை செய்த ஆசிரியர்களுக்கும், கலந்து கொண்ட மாணவர்களுக்கும், உதவி வழங்கிய பெற்றோர்களுக்கும் அறநெறிப் பாடசாலை நிருவாகம் நன்றிகளை தெரிவித்தனர்.




