ராஜபக்ச குடும்பத்தினரை மக்கள் பாரிய அளவில் நிராகரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் இதனால் தனது எதிர்கால அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கருதக்கூடுமென பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில குறிப்பிட்டள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். அடுத்து ஜனாதிபதி தேர்தல் ரணில் தனது வெற்றிவை உறுதிப்படுத்துவதற்கு ராஜபக்ச குடும்பம் தடையாக இருக்குமென நம்புவதாகவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
எனவே மக்கள் ஆதரவு குறைந்த ராஜபக்ஸர்களை ஓரங்கட்டுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக உதய கம்மன்பில சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
நாட்டில் மிகவும் மக்கள் ஆதரவு குறைந்த ஒருவராக பஸில் ராஜபக்ச இருக்கின்றார். அவரே பொதுஜன பெரமுனவின் தலைவர் ஆவார். இதனால் தனக்கு சுமையாக இருப்பவர்களை எவ்வாறு இல்லாது செய்வது என்பதனை ஜனாதிபதி சிந்திக்கலாம்.
மேலும், தற்போதைய நிலைப்பாட்டின்படி சமகால அரசாங்கத்துடன் எந்த கொடுக்கல் வாங்கலும் கிடையாது தனக்கு கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.