பாறுக் ஷிஹான்
வெசாக் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை(5) இரவு பொது மக்களுக்கு தேனீர் மற்றும் பிஸ்கட் கடலை சோறு தானம் வழங்கும் நிகழ்வு பரவலாக இடம்பெற்றன.
அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரியநீலாவணை, பாண்டிருப்பு, காரைதீவு, சம்மாந்துறை, அம்பாறை, நகரப்பகுதிகளில் பெருமளவான வெசாக் கூடுகள் பல வர்ணங்களில் நிர்மாணிக்கப்பட்டு பக்தி பாடல்கள் ஒலிபரப்பட்டு குறித்த தானம் வழங்கும் நிகழ்வுகள் இடம் பெற்றன.
மேலும் வங்கிகள் பொலிஸ் நிலையங்கள் இராணுவ முகாம்கள் ,கடற்படையினர், தனியார் நிறுவனங்கள், அரச நிறுவனங்களின் ஏற்பாட்டில் தானம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர இராணுவத்தினரால் மல்வத்தை, கல்முனை பகுதிகளில் பிரமாண்டமான வெசாக் கூடுகள் அமைக்கப்பட்டு பக்தி பாடல்கள் ஒலிபரப்பட்டிருந்தன.
இந்த வெசாக் கூடுகளை பார்வையிடுவதற்காக தமிழ், முஸ்லீம் மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ளதுடன் தானம் வழங்கும் நிகழ்விலும் பங்கேற்றிருந்தனர்.
மேலும் பிரதான வீதியினால் சென்ற பொது மக்களுக்கு பிஸ்கட் மற்றும் தேனீர் குளிர்பானம் என்பனவற்றையும் இராணுவத்தினர் தானமாக வழங்கியதை அவதானிக்க முடிந்தது.
இதேவேளை பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படை வெசாக் தின நிகழ்வினை முன்னிட்டு வெசாக் வெளிச்ச வீடுகளை தொங்க விட்டிருந்தனர்.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் உள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள், வைத்தியசாலைகளிலும் வெசாக் வெளிச்ச கூடுகள் பரவலாக காட்சி படுத்தப்பட்டிருந்தன.










