கல்முனையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகள் நடத்துவதற்கு எதிர்ப்பு!
ஞாயிற்றுக்கிழமை தினங்கள் அறநெறி பாடசாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். குறித்த தினத்தில் பிரத்தியேக ஏனைய வகுப்புகள் நடத்தப்படக்கூடாது என அரசாங்கம் ஏற்கனவே வர்த்தமானி மூலம் அறிவித்தல் கொடுத்திருந்தது.
ஆனால் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்ட பிரதேசங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் முற்பகல் வேளையில் பிரத்தியேக வகுப்புகள் இடம் பெறுகிறது என தெரிவிக்கப்படுகிறது. இதனால் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதில் தடங்கல் ஏற்படுகின்றன.
ஆகவே குறித்த தினத்தில் மாணவர்கள் அறநெறி பாடசாலைக்கு செல்வதனை ஊக்கப்படுத்தும் வகையில் பிரத்தியேக வகுப்புகளை முற்பகல் வேளைகளில் நடத்துவதற்கு கல்முனை வடக்கு பிரதேச செயலகம், கல்முனை மாநகர சபை, மற்றும் இந்து கலாசாரத் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமய அக்கறை கொண்ட அமைப்புகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.