கமு/சது வளத்தாப்பிட்டி அ.த.க பாடசாலை யின் 55 ஆண்டு நிறைவினை ஒட்டி இடம்பெற்ற நடைபவனியும் கலாச்சார விளையாட்டு விழாவும் 28:04:2023 பாடசாலை அதிபர் திரு.ஆர்.தர்சனாத் தலைமையில் இடம்பெற்றது இந்நிகழ்வில் சம்மாந்துறை கோட்டக்கல்விப்பணிப்பாளர்.
ஜனாப்.ஏ.எல்.அப்துல் மஜித் நாவிதன்வெளி கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.ப.பரமதயாளன் மற்றும் பாடசாலையின் முன்னைநாள் அதிபர்கள் ஆசிரியர்கள் தற்போது கடமைபுரியும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் என அதிகளவானோர் கலந்து சிறப்பித்தனர் அதிதிகளுக்கு பழைய மாணவர்களால் நினைவு சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.














