கல்முனை குருந்தையடி ஸ்ரீ செல்வவிநாயகர் அருள்மிகு கருமாரி அம்மனின் வருடாந்த திருச்சடங்கும் தீமிதிப்பும்
அம்பிகை அடியார்களே; சைவமும் தமிழும் தளைத்தோங்கும் நற்பதியாம் கல்முனை மாநகரில் கடல் அலைகள் தாலாட்ட குருந்தை மர நிழல்தனில் கோயில் கொண்டு தேடி வரும் அடியவர்களுக்கு நாடி அருள் புரியும் ஸ்ரீ செல்வ விநாயகர் சுவாமியின் ஆலயத்தில் வந்த அமர்ந்து குடிகொண்டு அருள் மழை பொழியும் அன்னையாம் அருள்மிகு கருமாரி அம்மனின் வருடாந்த திருச்சடங்கு வைபவம் ஆனது நிகழும் மங்கலகரமான சுபகிருது வருடம் சித்திரை மாதம் 17ஆம் நாள் (30.04.2023) ஞாயிற்றுக்கிழமை பூர்வபட்ச தசமி திதியும், மகம் நட்சத்திரமும், விருத்தி யோகமும், தைதிலக் கரணமும்,மேட லக்கினமும் கூடிய காலை 8.15 மணி முதல் 9.52 மணி வரை உள்ள சுப வேளையில் கல்முனை ஸ்ரீ ஐயனார் தேவஸ்தானத்திலிருந்து அம்பாள் எடுத்துவரப்பட்டு , கடல் தீர்த்தம் எடுத்து திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி சோபகிது வருடம் சித்திரை மாதம் 22ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு தீமிதிப்பு வைபவத்துடன் திருச்சடங்கானது நிறைவடைய அருள்மிகு கருமாரி அம்மனின் திருவருள் கூடியுள்ளது.
சடங்கு விபரம்
29.04. 2023 சனிக்கிழமை மாலை 7.00 மணிக்கு வாஸ்து சாந்தி கிரியை
30.04.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 8.15 மணிக்கு தொடக்கம் 9.52 மணி வரையிலான சுப முகூர்த்த வேளையில் கடல் தீர்த்தம் எடுத்தலும் திருக்கதவு திறத்தலும் சுவாமி எழுந்தருளல் பண்ணல் மாலை பூரண கும்பம் நிறுத்தலும் விசேட பூசையும்,
02.05.2023 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சுவாமி ஊர் காவல் பண்ணுதல்.
04.04.2023 வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு கல்முனை புலவி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பால் குட பவனியும் இரவு அகோர கும்பம் நிறுத்தலும் நள்ளிரவு தீ மூட்டுதலும் தொடர்ந்து சமுத்திரத்தில் வராகி அம்மனின் விஷேட பூஜையும் நடைபெறும்.
05.05.2023 வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு தீமிதித்தல் வைபவம் இடம்பெறும்.
தினமும் காலை 7.00 மணிக்கு
மதியம் 11 மணிக்கு இரவு 7:00 மணிக்கு பூஜைகள் ஆரம்பமாகும்.
மதிய பூசையினை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.
அனைவரும் வருக அம்மனின் அருள் பெறுக