மட்டக்களப்பு ஊடகவியலாளர் மு.கோகுலதாஸன் பயங்கரவா தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை—நீதவான் தீர்ப்பளிப்பு!!
(கனகராசா சரவணன்)
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு பிணையில் வெளிவந்த மட்டக்களப்பு கிண்ணியடியைச் சேர்ந்த ஊடகவியலாளர் முருகுப்பிள்ளை கோகுலதாஸன் வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று வியாழக்கிழமை (27) வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இணையதளங்களின் ஊடகவியலாளராக செயற்பட்டுவந்த மு. கோகுலதாஸன் மீது முகநூலில் புலிகளை கட்டியெழுப்பும் வகையில் பதிவுளை இட்டுள்ளார் எனும் குற்றச்சாட்டில் கடந்த 2020 நவம்பர் 28ம் திகதி வாழைச்சேனை பொலிசார் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இவரை ஒரு வருடமும் 4 மாதங்கள் தடுப்பு காவலில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இவர் சார்பாக பிரபல சட்டத்தரணி ஜெயசிங்கம் தொடர்ந்து ஆஜராகி வாதாடிவந்த நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய 2022 மாச் 7ம் திகதி பிணையில்; விடுவிக்கப்பட்டார்.
குறித்த வழக்கு இடம்பெற்று வந்த நிலையில் இன்று வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்காக ஊடகவியலாளர் பிரபல சட்டத்தரணி ஜெயசிங்கம் உடன் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜராகிய நிலையில் வழக்கு விசாரணைக்காக நீதவான் எடுத்தபோது சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய இந்த வழக்கில் இருந்து விடுவித்து விடுதலை செய்துள்ளதாக நீதவான் தீர்ப்பளித்து விடுவித்துள்ளார்.