ஹர்தாலினால் மட்டக்களப்பு முடங்கியது !!
கனகராசா சரவணன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹர்த்தாலையடுத்து அனைத்து வர்த்தக நிலையங்கள் பொதுசந்தைகள் மூடப்பட்டு போக்குவரத்து இன்றி வீதி வெறிச்சோடி மாவட்டத்தில் அனைத்து நிர்வாகங்களும் இன்று செவ்வாய்க்கிழமை (25) முடங்கியது
புதிய உத்தேச பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஹர்த்தாலுக்கு இன்று செவ்வாய்க்கிழமை (25) அழைப்பு விடுத்தனர்.
இதனையடுத்து இன்று மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேசங்களிலுள்ள வர்தக நிலையங்கள் மற்றும் பொது சந்தைகள் மற்றாக மூடப்பட்டுள்ளதுடன் பாடசாலைகளுக்கு மாவணர்கள் எவரும் சமூகமளிக்காததையடுத்து பாடசாலைகள் முடங்கியதுடன்
போக்குலரத்து இடம்பெறாததையடுத்து மக்கள் நடமாற்றம் இன்றி வீ
திகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் மாவட்ட அனைத்து செயற்பாடுகளும் முற்றாக முடங்கியுள்ளது.



