நாளைய பொது முடக்கத்துக்கு அனைவரும் ஒற்றுமையுடன் ஆதரவு வழங்குவோம் -ஹென்றி மகேந்திரன்
வடக்கு கிழக்கில் அரசினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் எமது மக்களுக்கும் மண்னுக்கும் எதிரான சூழ்ச்சிகளை கண்டித்து வடக்கு கிழக்கில் நாளை முன்னெடுக்கப்படவுள்ள பொது முடக்க போராட்டத்திற்கு அனைத்து சிறுபான்மை சமூகங்களும் ஒற்றுமையுடன் ஆதரவு வழங்க வேண்டியது எமது கடமையாகும்.
இவ்வாறு ரெலோ கட்சியின் முக்கிஸ்த்தரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் எதிர் கட்சி உறுப்பினருமான கென்றி மகேந்திரன் தெரிவித்தார்.
தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்துக்கு தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஓரணியாக தமது பேராதரவைத் தெரிவித்துள்ளனர்.
அரசுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் தெளிவான செய்தியை எடுத்துரைப்பதற்கு மக்கள் தமது இயல்புவாழ்வை நிறுத்தி ஹர்த்தாலுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கைவிடவேண்டும், வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள – பௌத்தமயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி நாளை செவ்வாய்க்கிழமை ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படுகின்றது.

