தேசிய பாடசாலைகளில் இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.
குறித்த சுற்றறிக்கை இன்று (20.04.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை
இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடிதங்களை வழங்குவதை கல்வி அமைச்சு இடைநிறுத்தியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் புதிய சுற்றறிக்கையின் படி, இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை அனுமதிக்கும் அதிகாரத்தை பாடசாலை அதிபருக்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.