(கனகராசா சரவணன்)
அன்னை பூபதியம்மாவின் 35 வது ஆண்டு நினைவேந்தலையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் யாழில் தியாக தீபம் திலீபன் பூங்காலில் இருந்து ஆரம்பித்து பூபதியம்மாவின் உருவச்சிலை தாங்கிய ஊர்த்தி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை இன்று செவ்வாய்க்கிழமை (18) வந்தடைந்ததுடன் அங்கு உருவச்சிலைக்கு பொதுமக்கள் கட்சி ஆதரவாளர்கள் மலர்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
அன்னை பூபதியம்மா 1988 ம் ஆண்டு மாச் 19 ம் திகதி இந்திய அமைதிபடையினருக்கு எதிராக 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றலில் 31 தினம் உண்ணா நோன்பு இருந்து ஏப்பில் 19 ம் திகதி உயிர்நீத்தார்.
அவரின் 35 வது நினைவேந்தலையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் யாழில் தியாக தீபம் திலீபன் பூங்காலில் இருந்து ஆரம்பித்து பூபதியம்மாவின் உருவச்சிலை தாங்கிய ஊர்த்தி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வர் ஆலையத்தை வந்தடைந்தது
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் காண்டீபன், மற்றும் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆலையத்தின் முன்றலில் ஆன்னை பூபதியம்மா உண்ணாவிரதம் மேற்கொண்ட மேடையில் தீபம் ஏற்றிஅஞ்சலி செலுத்தியதுடன் ஊர்வதியில் எடுத்துவரப்பட்ட ஆன்னையின் திருவுருவ படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்
இதனை தொடர்ந்து அங்கிருந்து மாவட்டம் தோறும் மக்கள் அஞ்சலிக்காக ஊர்த்தி பயணம் ஆரம்பித்ததையடுத்து மாகாஜனா கல்லூரியில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தியதையடுத்து வீதியெங்கும் ஊர்திக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.