இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் மூலோபாய பேச்சுவார்த்தைகள் நாளைய தினம் ஆரம்பமாக உள்ளது.லண்டனில் இந்தப் பேச்சுவார்த்தை நடாத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்தரப்பு தொடர்புகள் குறித்து கலந்துரையாடல்
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன இந்த பேச்சுவார்த்தையில் இலங்கையின் சார்பில் பங்கேற்க உள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பல்தரப்பு தொடர்புகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளது.
இதேவேளை, பொதுநலவாய நாடுகள் அமைப்பின் துணை பொதுச் செயலாளர் லுயிஸ் பிரென்செஸ்கீயை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணீ சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிவிவகார அமைச்சினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.