தேசிய அரசாங்கம் அமைப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது ஜனாதிபதி இந்த அழைப்பினை விடுப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டம்
தேசிய அரசாங்கம் அமைக்கும் திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அனைத்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை விடுக்க உள்ளதாக ஜனாதிபதி தம்மிடம் கூறியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியையும், ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றாக இணைக்க தாமும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் முயற்சித்த போதிலும் இந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பிரதமர் பதவி குறித்து ஜனாதிபதியை சந்தித்த போது எவ்வித விடயங்களும் பேசப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சில ஊடகங்களில் வெளியான தகவல்கள் அடிப்படையற்றவை எனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.