பாதையை மக்களுடன் நகர வேண்டாம் என கட்டளையிட்டது யார்? அம்பிளாந்துறையில் மக்கள் அவதி
புவி
நாளாந்த தேவைகளுக்காக பாதை ஊடாக ஆற்றைக் கடந்து பயணிக்கும் பொது மக்களும் விவசாயிகளும் ஆசிரியர்களும் மாணவர்களும் இன்று பெரும் இன்னல்களை சந்தித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது
வழமை போன்று ஆற்றை கடந்து பயணிக்க பாதையில் ஏறிய மக்களிடம் பாதையை செலுத்துபவர்கள் புதிய நடைமுறையாக கட்டணம் செலுத்துமாறு கூறியுள்ளனர். தாங்கள் ஜனாதிபதி செயலகதற்கு அறிவித்துள்ளோம் அங்கிருந்து முடிவு வந்ததன் பின்னர் கட்டணம் செலுத்துவது தொடர்பாக முடிவெடுங்கள் இன்று பயணிக்க அனுமதியுங்கள் அன்று மக்கள் கூறியுள்ளனர்.
ஆனால் இந்தப் பாதையை பராமரிக்கும் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் மக்களுடன் பாதையை செலுத்துவதை நிறுத்துமாறு பணித்துள்ளார்.
இதன் காரணமாக ஆற்றில் மிதந்த பாதையில் ஏமாற்றத்துடனும் மன உளைச்சலுடனும் பயணிகள் நீண்ட நேரம் காத்து நின்றுள்ளனர்.
இதற்கான தீர்வு என்ன என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்

