அனைவரினதும் வளமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக, USAID என்ற சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்துடன் இணைந்து பணியாற்றுவதற்கு இலங்கை எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ளது.
உலக வங்கி – சர்வதேச நாணய நிதியத்தின் வசந்தகால கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக நிதி இராஜாங்க அமைச்சர் ரொகான் சேமசிங்க அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு சென்றுள்ளார்.


டுவிட்டரில் கருத்து
இதன்போது, ஆசியாவிற்கான பணியகத்தின் துணை உதவி நிர்வாகி அஞ்சலி கவுரை வொஷிங்டனில் சந்தித்த பின்னர் அவர் தனது டுவிட்டரில் இந்தக் கருத்தைத் வெளியிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் நிலையான பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதில் USAID உடனான தொடர்ச்சியான பங்காளித்துவத்தைப் வரவேற்பதாகவும் அமைச்சர் ரொகான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.