மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் ஒருவன் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ருவான்வெல்ல பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மின்னல் தாக்கியதில் மேலும் இரண்டு சிறுவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதி
ருவன்வெல்ல மாபிட்டிகம பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் களனி ஆற்றில் குளித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கியுள்ளது.
காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.