பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமூலத்தை கடந்த 4 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்க திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
எனினும், பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கைகளை கருத்தில்கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் நடவடிக்கையை ஒத்திவைக்க தீர்மானித்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த சட்டமூலத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்காக அதனை ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் நீதியமைச்சர் தெரிவித்தார்.