பரிமாணம்- இந்த இதழின் புதிய அம்சம்

வாணனிடம் கேளுங்கள்

——————————————- 

1.      சந்திரசேகரன்,
ஆலையடி வேம்பு,
அக்கரைப்பற்று-01

நீங்கள் கடைசியாக ஆனந்தக்கண்ணீர் விட்ட தருணம் எது?

பதில் : ஐ.எம்.எஃப் கடன் வழங்கிய போது நம் நாட்டில் சிலர் வெடி சுட்டு, பாற்சோறு பகிர்ந்து அந்த சந்தோஷத்தைக் கொண்டாடினார்களே ,அப்போது.

2.      சினிமா பித்தன்,
ஜோஜ் ஆர். டி சில்வா மாவத்த,
கொழும்பு 13.
இளையராஜா கிறிஸ்தவ மதம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியிருக்கிறாரே. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் : இளையராஜாவின் இசை சிறப்பு. மைக் முன் பேசினால் வெறுப்பு !

3.      டெனிஷ்கா
பிரதான வீதி
பாண்டிருப்பு

நடிகை திரிஷாவுக்கு எப்போது திருமணம் நடக்கும் ?

பதில் : நடிகர் சிம்புவுக்குத் திருமணம் நடக்கும் அதேஆண்டில்.

4.      ஐயாக்கண்ணு,
செட்டியார் தெரு,
கொழும்பு 12.

முக்கனிகளாக மா, பலா, வாழை என்று எதை வைத்து முடிவு செய்தார்கள் ?

பதில்: நம் மண்ணில் கைக்கெட்டிய தூரத்தில் விளைந்திருக்க வேண்டும். விலை ஓரளவு கட்டுபடியாக வேண்டும். நாவுக்கு சுவையாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்த விஷயமாக அது இருக்கலாம்.

5.      எம்.எல்.எம்.ஆதம்பாவா
கல்முனை குடி

கல்முனை மாநகராட்சியில் பெரும் நிதி மோசடி நடந்திருப்பதாக செய்திகள் வெளிவருகின்றனவே?

பதில்: கவலை வேண்டாம். மக்கள் அதை மறந்து விடுவார்கள். கொன்றால் பாவம். தின்றால் போச்சு !

6.        காந்திமதி,
வட்டவிதான வீதி
கல்முனை 2

அண்மையில் வெளியான நல்ல திரைப்படங்களை சிபார்சு பண்ண முடியுமா?

பதில்: தமிழில் படுமொக்கையான திரைப்படங்களே வெளியாகின்றன. சற்று வித்தியாசமான படங்களாக ‘தலைக் கூத்தல் ‘, ‘டாடா’ ஆகியவற்றை சொல்லலாம். சின்ன விஷயங்களையும் கூட சிறப்பான திரைக்கதை, பொருத்தமான நடிகர்களின் நடிப்பு என்பவற்றால் மலையாளிகள் அழகு படுத்தி விடுகிறார்கள். அப்படி வந்த படங்கள் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ ‘இரட்டா’ (iratta).,ஜெய ஜெய ஹே, இந்தப் படங்கள் தமிழிலும் கிடைக்கின்றன. காந்தாரா கன்னடப் படமும் பார்க்க வேண்டிய ஒன்று.

நீங்கள் வெப் சீரீஸ் பிரியரானால் ‘ Farzi’, ‘The Night Manager’, ‘Breath into the shadow’, Rana Naidu’ என்பவற்றைப் பாருங்கள்.

  1. கொழும்பு
    மாளிகாவத்தை,
    இக்ரம்.

அறகலைக்கும் அறகலக காரர்களுக்கும் என்ன நடந்தது…? மீண்டும் களம் இறங்குவார்களா?…
பதில் – அறப்படித்து கூழ் பானைக்குள் விழுந்த கதைதான்… துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓடினார் கோட்டா. அது மட்டும் தான் நடந்தது. ரணி லின் கோல்பேஸ் ஆபரேஷன் , இவர்களையும் சுத்திகரித்தது. மொத்தத்தில் அறகல fail..
மக்கள் போராட்டம் ஒன்றை மழுங்கடித்ததுதான் இவர்களது வெற்றி….

  1. பரி யோவான்,
    கினிகத் ஹென,
    ஹட்டன்.
    தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிட்டுமா…?
    அட நீங்க போங்க….
    அப்படி ஒரு பிரச்சனையே இல்லை என்கிறார்கள். இல்லாத பிரச்சனைக்கு தீர்வை எப்படி கொடுப்பது…?
    தமிழர் என்றால் கிள்ளுக்கீரை தான்..
    நாட்டில் அரசியல் கைதிகளே இல்லை என்றார்கள். இப்போது கொஞ்சம் கொஞ்சமாக விடுகிறார்கள்.
    இனப்பிரச்சனையும் இல்லை என்று சொன்னவங்கள், இப்போது தென்னாபிரிக்காவுக்கு போய் தீர்வைத் தேடுகிறார்களாம்…
  2. ஓட்டமாவடி சம்சுதீன், செங்கலடி கனகரத்தினம்

வடக்கு,கிழக்கில் காலங்காலமாக இருக்கின்ற வீதிகளின் தமிழ் பெயர்களை சிங்கள பெயராக மாற்றுவதில் அதிகார வர்க்கம் மும்மூரமாக இருப்பது ஏன்…?

பதில்: நாய்வால் நிலையில் தான் அதிகார வர்க்கம் இருக்கிறது….
பித்து பிடித்து அலையும் மன நோயாளிகளை திருத்தவே முடியாது.
ஏறாவூரில் புன்னைகுடா வீதியின் பெயரை மாற்றப் போரார்களாம். இது பிந்திய செய்தி….
இவர்களது தற்காலிக திருப்தி, நாட்டை மறைக்கிறது.

  1. சிந்துஜன் நடராஜா
    உப்போடை, மட்டக்களப்பு டொலர் வந்து குவியும் என்றார்கள். இதனால் சகல பொருட்களின் விலைகளும் குறையும் என்றும் சொன்னார்கள்… அப்படி ஒன்றும் நடந்ததாக இல்லையே…..? பதில் : அவதிப்படாதங்க.. கிடைச்ச காசு கடன் கட்டவும் காணாது.. ஏன் உங்களுக்கு காய்கறி நல்லா விலை குறைஞ்சு தானே இருக்கு.. வயிறார சாப்பிடுங்க. எல்லாம் படிப்படியா நடக்கும் …🙏