பிரித்தானியாவில் அடிப்படை மருந்துகள் சிலவற்றிற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே பிரித்தானியாவில் அடிப்படை மருந்துகள் சிலவற்றிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால் தேவையில்லாமல் மருந்துகளை வாங்கி வீட்டில் குவிக்க வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில், காய்ச்சல் மற்றும் வலி நிவாரணியான Calpol முதல், Lemsip மற்றும் Gaviscon ஆகிய அடிப்படை மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மருந்தகங்கள் தெரிவித்துள்ளன.
வெளியான காரணம்
மேலும், குழந்தைகளுக்கான மருந்துகள் தற்போது மருந்தகங்களில் போதியளவு கையிருப்பில் உள்ளமையினால் பொதுமக்கள் தேவையில்லாமல் அவற்றை வாங்கி வீட்டில் குவிக்க வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிரித்தானியா உட்பட பல நாடுகளில் பயன்படுத்தப்படும் பாரசிட்டமோல் உள்ளிட்ட மாத்திரைகள் சீனா மற்றும் இந்தியா முதலான நாடுகளில் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் அந்த நாடுகளில் ஏற்பட்டுள்ள உற்பத்தி பிரச்சினைகள் மருந்து தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணம் எனவும் மருந்தகங்களின் கூட்டமைப்பின் தலைமை எக்சிகியூட்டிவ் ஆன Dr Leyla Hannbeck கூறியுள்ளது.