லிட்ரோ எரிவாயு விலையில் நாளைய தினம் (05) திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
எவ்வாறாயினும், விலை திருத்தம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விலை திருத்தம் இடம்பெற்றாலும் பாரிய அளவில் இடம்பெறாது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததன் பயனை மக்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
