நாட்டில் இன்று முதல் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில், இடைக்கிடையே 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
அதேநேரம், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில், மாலை அல்லது இரவு வேளையில், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.