மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இரண்டு சுற்று நிருபங்களை வெளியிட்டுள்ளதாக மத்திய வங்கி நேற்று அறிவித்துள்ளது.
அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வரிகள் காரணமாக வங்கிகளில் கடன் பெற்று தவிக்கும் மக்களுக்காக இந்த தீர்மானம் எடுக்க்பபட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
இதற்கிடையில், வழக்கமான வைப்பு வசதி விகிதம் மற்றும் வழக்கமான கடன் வசதி விகிதம் ஆகியவற்றை உயர்த்தவும் மத்திய வங்கி முடிவு செய்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.