அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி திடீரென அதிகரித்துள்ளது.
இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளுக்கு வெளிநாட்டு நிறுவனமொன்றிலிருந்து 400 மில்லியன் டொலர்கள் பெறப்பட்டமையே ரூபாய் பெறுமதி அதிகரிப்பதற்கு பிரதான காரணமாகும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் பணம் அதிகரிப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் வருமானம் காரணமாக நாட்டின் கையிருப்பு வளர்ச்சியை வெளிப்படுத்தி வருவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
ரூபாய் பெறுமதி அதிகரித்தால் அது நாட்டிற்கு நல்ல விடயமாகும். வெளிநாட்டில் பணியாற்றும் ஊழியர்களால் இலங்கைக்கு 2.1 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.
160 மில்லியன் டொலர் வரையில் சுற்றுலா துறையினரால் கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இவ்வாறான விடயங்களே ரூபாய் பெறுமதியில் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளதென பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும், சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து எதிர்பார்க்கப்படும் கடன் தொகை கிடைத்தால், அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேறு வழிமுறைகள் உள்ளன என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா மேலும் தெரிவித்தார்.