க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போதைக்கு பரீட்சை தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து வழங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அதற்கான சுற்றுநிரூபம் வௌியிடப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில் உயர்தர பரீட்சையின் வினாத்தாள்களை திருத்தும் பணிக்கு 19000 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.
வினாத்தாள் திருத்தும் பணிகள்
எனினும் 15000 பேரே அதற்காக விண்ணப்பித்திருக்கும் நிலையில் அவர்களைக் கொண்டு வினாத்தாள்களை திருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் காலதாமதம் ஏற்படக் கூடும் என்று கல்வி அமைச்சு கருதுகின்றது.
ஏற்கனவே உயர்தரப் பரீட்சையும் தாமதித்து நடைபெற்றுள்ள நிலையில், பரீட்சைத் தாள்களை திருத்தும் பணிகளை தாமதப்படுத்த இடமளிக்காது.

அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை அதற்காக ஊக்குவித்து மாணவர்களின் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஆசிரியர் சங்கம் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த கோரிக்கை விடுத்துள்ளார்.