மாவட்ட தொழுநோய் கருத்தரங்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை, கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம், தொழு நோய்க்கான இலங்கையிலுள்ள அமைப்புகள், பிரித்தானிய தொழுநோய் அமைப்பு போன்றவற்றுடன் இணைந்து மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை நேற்று வெற்றிகரமாக நடத்திமுடித்தது.
மட்டக்களப்பில் கடந்த வருடம் மிக அதிகமாக கண்டுபிடிக்கப்பட்ட பெரியவர், சிறுவர்களின் தொழுநோய் எண்ணிக்கையைத் தொடர்ந்து நாம் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலை முன்னெடுத்திருந்ததுடன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தியா சென்று பயிற்சியொன்றை பூர்த்தி செய்ததுடன் அங்கு பிரசன்னமாகியிருந்த பிரித்தானிய The Leprosy Mission ஐயும் மட்டக்களப்பிற்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்தோம்.
இன்றைய கருத்தரங்கில் மட்டக்களப்பில் அதிகரித்துவரும் தொழுநோயை கட்டுப்படுத்துவதில் இணைந்துகொண்ட அனைவரும் தமது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்திருந்தனர்.
விரைவில் நாம் ஒருங்கிணைந்த முறையில் தொழுநோயை மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுப்படுத்துவோம். என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.