இலங்கையில் மின்சார அலகு ஒன்றின் உற்பத்தி செலவு, ஒரு அலகுக்காக இந்தியா செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என இந்திய மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் இந்திய மின்சக்தி அமைச்சு இந்த தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்ய இந்தியா 25 இலங்கை ரூபாவை மட்டுமே செலவிடுகிறது.
எனினும் இலங்கை தற்போது ஒரு அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு 52 இலங்கை ரூபாவை செலவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின் உற்பத்தி
இலங்கை தனது மின் உற்பத்திக்காக பெருமளவு நிலக்கரியை நம்பியிருப்பதே இந்த செலவு இடைவெளிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
இலங்கையில் காற்றாலை மின்சாரம் மற்றும் சூரிய சக்தியும் மின்சார உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டாலும், அவற்றின் சதவீதம் குறைவாகவே உள்ளன.
இந்நிலையில், சூரிய சக்தி, அணுசக்தி, காற்றாலை மற்றும் நிலக்கரி போன்ற பல ஆற்றல் உற்பத்தி ஆதாரங்களின் விகிதாசார பயன்பாடு காரணமாக இந்தியா தனது ஆற்றல் உற்பத்தி செலவை பெருமளவில் குறைத்துள்ளதாக இந்திய மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.