இந்தோ-அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக எதிர்காலத்தில் பெரிய நில நடுக்கங்களை இலங்கை எதிர்பார்க்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
புத்தல, வெல்லவாய மற்றும் மொனராகலையின் பல பகுதிகளில் பதிவான நிலநடுக்கமும் கண்டத் தட்டுக்களின் நகர்வு காரணமாக ஏற்பட்டதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.
இலங்கையில் இருந்து 1,000 மைல்களுக்கு அப்பால் இத்தகைய நடுக்கம் ஏற்படுவதால் அதன் தாக்கம் குறைவாகவே இருப்பதாக பேராசிரியர் தெரிவித்தார்.
இந்தோ-அவுஸ்திரேலிய கண்டத் தட்டுக்கள் ஏற்கனவே இரண்டாகப் பிளவுபடத் தொடங்கியிருப்பதாகவும், கடந்த 15 முதல் 20 ஆண்டுகளில் இது நிகழும் வீதம் அதிகரித்திருப்பதாகவும் நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தியப் பெருங்கடலை உலுக்கிய சமீபத்திய பாரிய நிலநடுக்கங்களும் பூமியின் மேற்பரப்புக்குள் ஒரு புதிய தட்டு எல்லையை உருவாக்குவதற்கான சமீபத்திய படியை சமிக்ஞை செய்துள்ளன.