ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்துக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.
இதற்கமைய இந்த விஜயம் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) கடற்றொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வுகளின் ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.
குறித்த கூட்டத்தில் யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, ஜனாதிபதியின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர், பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், முப்படைகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலர்கள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 11ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.