இலங்கையின் 75ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் கொழும்பு – காலிமுகத்திடலில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்கேற்புடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.
அதில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு ராஜதந்திரிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இம்முறை சுதந்திர தின நிகழ்வுகளில் 3284 இராணுவத்தினர், 179 யுத்த வாகனங்கள், 867 கடற்படையினர் மற்றும் அவர்களது 52 வாகனங்களும் பயன்படுத்தப்படவுள்ளன.
வான் படையின் 695 உத்தியோகத்தர்களும், 336 பொலிஸாரும் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கின்றனர்.
அத்துடன் பொலிஸ் விசேட அதிரடி படையை சேர்ந்த 220 பேரும் இன்றைய சுதந்திர நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, 75ஆம் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகள் 588 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 பேருக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.