கலைக் கொழுந்துக்கு கவலையுடன் காணிக்கை

கலைக் கொழுந்தன் என்ற ஒரு சமூக சிந்தனையாளனை நாம் இழந்து இருக்கின்றோம்.
எழுத்தாளன், கவிஞன், பகுத்தறிவு பாசறையின் பண்பாளன், பேரிலக்கிய ஆளுமை, சிறந்த அரசியல் பேச்சாளர்…. என பன்முக ஆளுமை கொண்ட கலைக்கொழுந்தன், அடக்கத்தின் அடையாளமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பெருமைக்குரிய சிந்தனையாளன்.
வறுமை வாட்டிய பொழுதிலும், எழுத்தையும் வாசிப்பையும் இலக்கியத்தையும் உயிர் மூச்சாக நேசித்த ஒரு கனவான்.
தந்தை செல்வா, அமரர் அமிர்தலிங்கம், அமரர் வேல்முருகு மாஸ்டர்… ஆகியோர் வழியில் தன் கொள்கையை வகுத்து செயல்பட்ட அண்ணன் கலை கொழுந்தன், இறுதி மூச்சு வரை சோரம் போகாத கொள்கை வாதியாகவே திகழ்ந்தார். 1974 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து தமிழரசு கட்சியின் தீவிர செயல்பாட்டாளராக இருந்த கலை கொழுந்தன், தமிழ் தேசியத்திற்காக என்றும் தன் குரலை உயர்த்திப் பேசியவர்.
காணும் போதெல்லாம் மூச்சு வாங்க வாங்க.. தமிழரின் அவல நிலையை கவலையோடு பேசும் இனப் பற்றாளன் இவர்.
என்ன செய்ய?.. காலன் கொடியவன் …
” கண் கெட்ட காலனுக்கு மண்போட யாருண்டோ.. ” என்ற வாசகத்தை உங்களிடம் தான் நான் கற்றேன்.
அண்ணன்…. நிம்மதியாக தூங்குங்கள். காலம் சுழன்று வரும்போது சந்திப்போம்…

உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்

முயலகன்.