மாவனெல்ல பிரதேசத்தில் உயர் அழுத்த நீர் குழாயொன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹெம்மாதகம பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாவனெல்லை ஹெம்மாதகம வீதியில் வெட்டேவ நோக்கி செல்லும் நீர் குழாய்களின் அழுத்தத்தை மாவனல்லை நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான நிறுவனமொன்று பரிசோதித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த நபர் அந்த வீதியின் ஊடாக பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குழாய் வெடித்ததில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த நபர் மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://www.kalmunainet.com/wp-content/uploads/2023/01/download-1-18.jpeg)