மின்சார அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 23 ஆம் திகதி குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்சார துண்டிப்பை நிறுத்துமாறு பலரும் வலியுறுத்தியிருந்த போதும் 2 மணி நேரம் மின்சாரம் தடைபடும் என அமைச்சரவை பேச்சாளர் அறிவித்திருந்தார்.