டிலக்ஷன் மனோரஜன்
WALTHAM FOREST தமிழ் சமூகத்தின் ஏற்பாட்டில் 21.01.2023 சனிக்கிழமை இடம்பெற்ற தமிழ் மரபு திங்கள் 2023 நிகழ்வின் ஒரு பகுதியாக *தமிழ் மரபுக் கண்காட்சி* இடம்பெற்றது இதை *தமிழ் தகவல் நடுவம்* (*TIC*)மற்றும் *சமூக வளர்ச்சிக்கான மையம்* (*CCD*)ஆகிய அமைப்புகள் ஒழுங்கமைத்து நடத்தி இருந்தது.
இன்றைய பன்மைக்கால கலாச்சார சூழலில் ஒரு சமூகத்தின் பண்பாடு மரபுரிமைகளை விளங்கிக் கொள்வதற்கு அது சார்ந்த சமூக வரலாற்றை புரிந்து கொள்வது இன்றியமையாததாகும்.
தமிழ் மொழியால் இணையக்கூடிய இளம் தலைமுறையினரும் மற்றைய இனத்தவர்களும் தமிழ் பண்பாட்டின் மரபுரிமைகளை விளங்கிக் கொள்வதற்கும் அவற்றை பேணி பாதுகாப்பதற்கும் இந்நிகழ்வுகள் மிக அவசியமாகும்.
கண்காட்சியின் போது தமிழர்களின் பண்டைய வரலாறு தமிழர் கலாச்சாரம் தமிழர்களின் தொன்மைக்கால வாழ்வியல் அம்சங்கள் தகவல்கள் மற்றும் பொருள்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
ஈழத் தமிழர்களின் வாழ்வியல் சார் அம்சங்கள் வாழ்வியல் அமைப்புகள் தரைத்தோற்ற அம்சங்கள் இன மத மொழி அடையாளங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டு கண்காட்சியை பார்ப்பவர்களுக்கு அது சார்பான அறிவியலையும் தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றையும் வெளிப்படுத்தக் கூடிய வண்ணம் அமைந்திருந்தது.
பலர் இக் கண்காட்சியை பார்வையிட வருகை தந்ததுடன் இக்கண்காட்சியை ஒழுங்கமைத்த *TIC* மற்றும் *CCD* அமைப்புகளுக்கும் நன்றி பாராட்டினர்.