தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்களுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக திணைக்களத்தினால் சான்றளிக்கப்பட்ட ஆவணத்தை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வழங்கப்படும் ஆவணம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் வரை செல்லுபடியாகும் வகையில் தயாரிக்கப்படும் எனவும் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, தேசிய அடையாள அட்டைகளை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்படும் அட்டைகளின் தற்போதைய தட்டுப்பாடு நீங்கும் வரை தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதை கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.