உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்று செவ்வாய்கிழமை முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது. இந்தக் காலப்பகுதியில் அவர் விளக்கமளிப்பாரென தெரிவிக்கப்படுகிறது.
தமது சொத்து குறித்து அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும், அதனை செலுத்தும் அளவுக்கு சொத்து தம்மிடம் இல்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்துடன் செயற்பட்ட ஜனாதிபதி ஒருவருக்கு மிகப்பெரிய அபராதம் விதிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக, ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு பதிவாகி உள்ளது.