சர்வதேச நாணய நிதியத்தின் பிணை வழங்கும் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமானதாக இல்லை.
இது உணவு, எரிபொருள், கட்டுமானப் பொருட்கள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு கடன் கொடுனர்களுடன் முன்கூட்டிய ஒப்பந்தத்தை எட்டுவதில் தாமதம் ஏற்படுவதால், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு ஒப்புதல் மற்றும் நிதி வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.
இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான தொழிநுட்ப பிரச்சினைகளாலும் பெறுபேறுகள் தாமதமாவதாலும் நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பரஸ்பர புரிந்துணர்வு மூலம் இந்த செயல்முறையின் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.