அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வரி திருத்தங்களுக்கு எதிராக 15,000 வைத்தியர்களின் கையொப்பங்கள் அடங்கிய மனுவொன்றை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், நேற்று (11.01.2023) கையொப்பமிட்ட மனுவை ஜனாதிபதி செயலகத்தில் கையளித்துள்ளது.
வரித் திருத்தங்களை ரத்து செய்யுமாறு கோரிக்கை
அனைத்து மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வைத்தியர்கள் இந்த மனுவில் கையொப்பமிட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய வரித் திருத்தங்களுக்கு எதிராக மருத்துவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பல சங்கங்கள் ஏற்கனவே போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன.
தற்போதைய வரித் திருத்தங்களை ரத்து செய்து அனைவருக்கும் நியாயமான வரிக் கொள்கையை முன்வைக்குமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.