2023ஆம் ஆண்டின் முதல் வாரத்தில் இலங்கையில் 2,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 02 ஆம் திகதி முதல் 07 திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இந்த எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்தக் காலப்பகுதியில் கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 440 பேர் டெங்கு நோயாளர்களாக உள்ளனர்.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 433 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 273 பேரும், கல்முனை மாவட்டத்தில் 147 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் 128 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இது தவிர கடந்த 7 நாட்களில் களுத்துறை மற்றும் கண்டி மாவட்டங்களில் அதிக சதவீத டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.