எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக நேற்று(திங்கட்கிழமை) வரை அங்கீகரிக்கப்பட்ட 06 அரசியல் கட்சிகளும், 10 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தவிர அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய காங்கிரஸ் கட்சியும், கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியும் கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் கட்சி கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளது.
இதேவேளை, இன்று மேலும் மூன்று மாவட்டங்களில் கட்டுப்பணத்தை வைப்பிலிடவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்று காலை அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களிலும், பிற்பகல் திருகோணமலை மாவட்டத்திலும் கட்டுப்பணத்தை வைப்பிலிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.