மின்சாரக் கட்டணத்தை கணிசமான சதவீதத்தினால் அதிகரிப்பதை மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலம் முழுவதும் வரி மற்றும் கட்டண உயர்வால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஆகஸ்ட் மாதம் மின் கட்டணம் 76% அதிகரிக்கப்பட்டது.
மின்கட்டண அதிகரிப்பு இந்த நாட்டில் உள்ள சாதாரண மக்களுக்கும் வர்த்தக சமூகத்துக்கும் பாதகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.