Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the post-slider-and-carousel domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kalmowix/public_html/wp-includes/functions.php on line 6114
தமிழ் தகவல் நடுவத்தின் மனித உரிமைகள் விருது வழங்கும் நிகழ்வு - Kalmunai Net

மனோரஜன் டிலக் ஷன்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2021 நிகழ்வு இலண்டனில் நடைபெற்றது.

உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்திய 74வது ஆண்டு நிறைவையிட்டு, மனித உரிமைகள் தினத்தை நினைவுகூருவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிக்கான நீதி தேடல்
அதன்படி TIC யின் இவ்வாண்டுக்கான மனித உரிமைகள் தின நிகழ்வு, இலண்டனில் சட்டன் (Sutton) பகுதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. இந்த வருட நிகழ்வுகள் “ வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிக்கான நீதி தேடல்” (Justice For Enfored Disappearance in Sri Lanka) என்ற தலைப்பில் இடம்பெற்றன.

மனித உரிமைகள் விருது வழங்கும் விழா (Photos) | International For Human Rights London

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஐ.நா. நிபுணரும், பேராசிரியரும் அமெரிக்க சட்ட வல்லுனருமான பேராசிரியர் அல்பிரட் மொறைஸ் டீ சயாஸ் (Prof Alfred-Maurice de Zayas), இலண்டன் பல்கலைக்கழகத்தின் (University of London – SOAS) சர்வதேச மனித உரிமைகள் சட்டதுறை பேராசிரியர் லூட்ஸ் ஓட்டே (Prof Lutz Oette), வெஸ்மினிஸ்டர் பல்கலைக்கழகத்தின் சட்டதுறை பேராசிரியர் ராதா டி சோய்சா (Prof Radha D’Souza), ஐனநாயகம் ஊடாக அமைதிக்கான விதவைகள் அமைப்பின் (Widows for Peace through Democracy) தலைவரும் வழக்குரைஞரும் மகாராணியின் சிறப்பு பட்டம் பெற்றவருமான மாகிரட் ஓவண் (Magret Owen OBE), பிரான்ஸ் தமிழ் மனித உரிமைகள் அமைப்பின் (TCHR) நிறுவனரும் செயலாளர் நாயகமுமான திரு. ச. வி. கிருபாகரன், சட்டன் பகுதி கவுண்சிலர் குமார் சகானத்தன், ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள், ஏனைய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ் தகவல் நடுவம் மற்றும் சமூக அபிவிருத்தி மையத்தின் (CCD)யின் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

ஆவணப்படம்
மங்களவிளக்கேற்றல் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து நடனத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதான சிறப்புரையினை ஜனநாயக மற்றும் சமமான சர்வதேச ஒழுங்கை மேம்படுத்துவதற்கான ஐ.நா.வின் முன்னாள் நிபுணர் பேராசிரியர் அல்பிரட் மொறைஸ் டீ சயாஸ் Alfred-Maurice de Zayas நிகழ்த்தினார்.

மனித உரிமைகள் விருது வழங்கும் விழா (Photos) | International For Human Rights London

அதனை தொடர்ந்து இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினர் எதிர்நோக்கும் நாளாந்த பிரச்சினைகள், நீதிக்கான போராட்டம் மற்றும் அச்சுறுத்தகள் என்பவற்றை எடுத்துக்காட்டும் முகமாக, சர்வதேச விருதுபெற்ற திரைப்பட இயக்குனரான கண்ணன் அருணாச்சலம் அவர்களால் வெளியிடப்பட்ட, அனந்தி சசிதரன் அவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் “இலங்கையில் போராளியின் மனைவி” (Sri Lanka, Rebels Wife) என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது.

மனித உரிமைகள் விருது வழங்கும் விழா
அதனைத் தொடர்ந்து ஏனைய சிறப்பு அதிதிகளின் உரைகள் இடம்பெற்றதுடன், இலங்கையில் இடம்பெற்ற மாபெரும் மனித உரிமை மீறலை சித்தரிக்கும் சித்தரிக்கும் குறியீட்டு நடாகம் ஒன்றும் மெய்வெளி நாடகக்குழுவினரால் அரங்கேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, TIC யினால் ஆண்டுதோறும் வழங்கப்படும் மனித உரிமைகள் விருது வழங்கும் விழாவும் இடம்பெற்றது.

TIC யின் நிறுவுனர்களில் ஒருவரும் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளருமான காலம்சென்ற உயர்திரு வைரமுத்து வரதகுமார் அவர்களின் ஞாபகார்த்த விருது (Varadhakumar Memorial Award 2022) இம்முறை பேராசிரியர் லூட்ஸ் ஒட்டே (Prof Lutz Oette) அவர்களுக்கு வழங்கப்பட்டது.