மலையக மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது.
தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக ஒன்றிணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான இனப் பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட மூன்று விடயங்களை ஜனாதிபதியிடம் வலியுறுத்துவது என தமிழ் கட்சிகள் ஒரு இணைக்கப்படும் வந்திருந்தன.
அதன்படி எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பின்னர் தமிழ் தரப்புக்களுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்கவின் செயற்பாட்டில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்ட சுமந்திரன், எவ்வாறாயினும் கிடைத்த சந்தர்ப்பத்தை வேண்டித்தவர்கள் என்ற பழியை சுமக்காமல் பேச்சுவார்த்தைக்கான ஆயத்தங்களை செய்துவருவதாக கூறினார்.
அதிகாரப்பகிர்வு என்ற விடயம் சம்பந்தமான பேச்சுக்கள் இடம்பெறுவதாக இருந்தால், மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகளுடனும் மேற்படி விடயங்கள் சம்பந்தமாக இணக்கப்பாட்டை எட்ட வேண்டியுள்ள நிலையில் அவர்களுடனும் பேசவுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.