அடுத்த 12 மணி நேரத்தில் வங்க கடலில் இடம்பெறவுள்ள மாற்றம்
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளுக்கு நகர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் படிப்படியாக வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு-வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்வதுடன், நாட்டின் பிற பகுதிகளில் சீரான வானிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.