அலுவலக நிருபர்
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும்
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான
கருத்தரங்கும், அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் நேற்று 08.11.2022 பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்
திரு.தி.ஜெ.அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வே.ஜெகதீஸன்
கலந்து சிறப்பித்தார்.
இதன்போது திணைக்களத்தின் செயற்பாடுகள், அறநெறிப் பாடசாலைகளின் செயற்பாடுகளை விஸ்தரிப்பது தொடர்பான நடவடிக்கைகள், புதிய பாடத்திட்டம் தொடர்பான கலந்துரையாடல்கள் என்பன இடம்பெற்றதுடன் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கான சீருடை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு.கு.ஜெயராஜி, திரு.ந.பிரதாப் ஆகியோருடன் பிரதேச இந்துகலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திருமதி.க.சுஜித்திரா,
திருமதி நா.ஶ்ரீபிரியா ஆகியோரும்
அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.













