Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the post-slider-and-carousel domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/kalmowix/public_html/wp-includes/functions.php on line 6114
விட்டுக்கொடுப்பு என்னும் சொல் கடந்த காலத்தோடு காலாவதியாகிவிட்டது-ஹரிஸின் கருத்துக்கு பதிலடி - Kalmunai Net

விட்டுக்கொடுப்பு என்னும் சொல் கடந்த காலத்தோடு காலாவதியாகிவிட்டது எமக்கு தேவையானதை நாம் பெற்றுக் கொள்வோம்
ஹரீஸ் கருத்துக்கு
தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் அ.நிதான்சன் பதிலடி

கல்முனை பிரதேச செயலகம் வடக்கு விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு என்னும் சொல் காலவதியாகிவிட்டது.
33 வருடமாக விட்டுக்கொடுப்பு என்னும் சொல்லில் இனவாத குளிர்காய்ந்தவர்கள் அரசியல் சுகம் அனுபவித்து விட்டார்கள்.
எவ்வித விட்டுகொடுப்புக்களும் இன்றி வடக்கு பிரதேச செயலக நிர்வாக எல்லைகள் உள்ளடக்கிய பிரதேச செயலக நிர்வாக ரீதியாக இயங்குவதில் போடப்படும் முட்டுக்கட்டைகளை இடுபவர்களுக்கு இனிவரும் காலங்கள் கடினமானதாக அமையும் 1993ஆண்டு முதல் முழுமையான அதிகாரத்துடன் இயங்க வேண்டிய நிர்வாக அலகினை இயங்கவிடாது தடுத்துவரும் இனவாதிகளுக்கு தக்கபதிலடி விரைவில் வழங்கப்படும்.மேலும் வடகிழக்கு இணைப்புக்கு ஒத்துவராத இனவாத முஸ்லிம் தலைவர்கள் இருக்கும் மட்டும் கல்முனை கரையோர மாவட்டமும் கனவாகவே செல்லும்.மேலும் கல்முனை 95%தமிழர்களை கொண்ட நகரம் அங்கு சட்டவிரோத ரீதியாக உருவாக்கப்பட்ட சிங்கள கொலனி(இஸ்லாமபாத்) இன்று இனரீதியான பெயரில் இயங்குகின்றது இதனை ஒரு போதும் ஏற்க முடியாது.கல்முனைக்குடி கல்முனையாக மாற்றப்பட்டு ஆக்கிரமிப்பு,திட்டமிட்ட அரச காணிகள் கபளீகரம் செய்யப்படுகின்றமை நாளுக்கு நாள் நிர்வாக எல்லையினுள் மாற்றங்கள் எவ்வித அரச அனுமதியும் இன்றி சட்டவிரோதமாக மாற்றப்படுகின்றமை போன்ற செயல்களை நிறுத்தாத வரைக்கும் விட்டுக்கொடுப்பு எனும் பதம் யாரும் பயன்படுத்தி பலன் இல்லை.

தமிழ்,சிங்கள,முஸ்லிம் மக்களை உள்ளடக்கி நிர்வாகம் செய்யும் வடக்கு பிரதேச செயலகத்தின் செயல்பாடுகளை நிர்வாக முடக்கத்தினை அரசோடு ஒட்டி உறவாடி செயல்படும் இயற்கை நீதிக்கு முரணான விடயங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.முஸ்லிம் மக்கள் மத்தியில் சென்று தமது வாக்குகளை கேட்க முடியாமல் இருக்கும் 20வது திருத்ததிற்கு கைகளை உயர்த்திய அரசியல்வாதிகள் இனவாத ரீதியாக அரசியல் தூபமிட்டு தமது பதவிகளை தக்க வைக்க எடுக்கும் ஆயுதமே வடக்கு பிரதேச செயலக விவகாரம் ஆகும்.இந்த செயல்பாடுகள் இனிவரும் காலங்களில் சரிவராது என புரிந்து கொள்ள வேண்டும்.

அமைச்சரவை அனுமதி இருந்தும் அரச அதிகாரிகளின் தாந்தோன்றித்தனமான செயல்பாடுகளும் கண்டிக்கத்தக்கது.கடந்த காலத்தில் கல்முனை காணி பதிவாளர் அலுவலகத்திலும்
இவ்வாறான மீறல்கள் இடம்பெற்று இருப்பதை அறிய முடிகின்றது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடகிழக்கு இணைப்போ அல்லது அதிகார பரவல் சமஷ்டி முறை கோருகின்றது தமிழ்பேசும் சமூகத்திற்காவே எனும்போது அதில் அரசியல் இலாபம் தேடுபவர்கள் தமது பதவிக்காக இன்று இனவாத அரசியல் தூபம் இடுகின்றனர் ஜனாசாக்கள் எரிக்கும் போது வாய்மூடி மௌனிகளாக இருந்து விட்டு ஆக்கிரமிப்பு விட்டுக் கொடுப்பு எனும் சொல் பதங்களை பாவித்து நிர்வாக முடக்கத்தின் ஊடாக முஸ்லிம் மக்களை காப்பதாக நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர்.இறந்தவரின் ஜனாசாக்களுக்காக குரல் கொடுக்காமல் இருந்து விட்டு முஸ்லிம் சமூகத்தை காக்கப் போகின்றோம் எனும் உசுப்பேற்றல் அரசியல் இனிவரும் காலத்தில் செல்லுபடியாகாது என்பதனை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்